2025 ஜூலை 02, புதன்கிழமை

கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக அப்துல் ரஸாக் தெரிவு

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி பொருளாளர் நாயகம் கே.எம். அப்துல் ரஸாக் (ஜவாத்)  நியமனம் செய்யப்படடுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவிருந்த  எ.எம்.ஜெமீல், அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக, கட்சியின் விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்தபடியாகவிருந்த கே.எம். அப்துல் ரஸாக் (ஜவாத்) நியமனம் செய்யப்படடுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், கடந்த செவ்வாய்க்கிழமை (20) தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால்  வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .