Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Gavitha / 2016 மார்ச் 12 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் இந்தக் காணி பிரச்சினைகள் தொடர்பில் இது வரையிலும் சுமார் 17,896 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் காணி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்தே குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கடந்த 2013, 2014, 2015 ஆகிய மூன்று வருடங்களில் காணிப்பிரச்சினை தொடர்பில் 17,896 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திருகோணமலை மாவட்டத்தில் 3,428 காணிப் பிரச்சினைகளும் அம்பாறை மாவட்டத்தில் 9,453 பிரச்சினைகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,256 பிரச்சினைகளும் பதிவாகியுள்ளதாக காணி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. காணி இழந்தவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சு கூறுகிறது. இவை புதிய குடியேற்றங்களின் தரவுகளா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 1,256 பேருக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2029 பேர்களுக்கு காணிகளும் அம்பாறை மாவட்டத்தில் 831 பேருக்கு காணிகளுமாக கிழக்கில் 4,115 பேருக்கு காணித்துண்டுகள் வழங்கியுள்ளதாகவும் காணி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வெளி மாகாணங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் காரணமாகவே காணிப் பிணக்குகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி 17,896 காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளதாக காணி அமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலையில் 365 பிரச்சினைகளும் அம்பாறையில் 294 பிரச்சினைகளும் மட்டக்களப்பில் 1,127 பிரச்சினைகளும் தமது அமைச்சால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago