2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணத்தில் 600 கிலோமீற்றர்; வரை கார்ப்பட் வீதிகளாக புனரமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மே 10 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 600 கிலோமீற்றர்; வரை கார்ப்பட் வீதிகளாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின்; காரியாலயத்தில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகள் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்த வகையில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக 200 கிலோமீற்றர் வீதியும் கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகள் ஊடாக 400 கிலோமீற்றர் வீதியும் கார்ப்பட் இடப்படவுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகள் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் 175 கிலோமீற்றர் வீதியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 125 கிலோமீற்றர் வீதியும் திருகோணமலை மாவட்டத்தில் 100 கிலோமீற்றர் வீதியும் கார்ப்பட் இடப்படவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X