2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கைவிடப்பட்ட அபிவிருத்திகளை பூர்த்தியாக்க தீர்மானம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் முடிவடையாத அபிவிருத்தி வேலைகளை குறுகிய காலத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனைப்  பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் யாவும் முடிவடையாமையை அடுத்து, இது தொடர்பில்  பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடப்பட்டது.  

இப்பிரிவில் பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, தீகவாபி உள்ளிட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தி மற்றும் வடிகான் அமைப்பு மிகச் சரியாக இடம்பெறவில்லை என்பதுடன், இந்த அபிவிருத்தி வேலைகள் அரைகுறையாக உள்ளமையை அதிகாரிகளிடம் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் சுட்டிக்காட்டினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X