2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காவலாளியை தாக்கியவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 06 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அம்பாறை, காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் காவலாளி ஒருவரைத்; தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய ஒருவரை காரைதீவுப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வைத்தியசாலையின் காவலாளியான ஐ.எல்.எம்.பாறூக் (வயது 53) என்பவர் வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கடமையில் இருந்தபோது, குறித்த நபரினால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது.

இவ்வைத்தியசாலையினுள் நுழைய முற்பட்ட ஒருவரைத் தடுக்க முற்பட்டபோது, காவலாளியை குறித்த நபர் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறிருக்க, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதும், குறித்த நபர் கைதுசெய்யப்படாமையைக் கண்டித்தும் வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும் இவ்வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஆகியோர் இன்றையதினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பதில்  பொறுப்பதிகாரி ஐ.பி.பத்மசிறி, 'தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்' எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X