2025 மே 21, புதன்கிழமை

கஞ்சா போதைப்பொருளுடன் இருபெண்கள் கைது

Sudharshini   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்              

அம்பாறை, அட்டாளைச்சேனை -16 ஆம் பிரிவிலுள்ள வீடொன்றில் 297 கிராம் கஞ்சா போதைப்பொருளை தம்;வசம் வைத்திருந்த இரு பெண்களை, இன்று (27) கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார்; தெரிவித்தனர்;.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ; தலைமையிலான பொலிஸ் குழுவினர்; குறித்த வீட்டை  சுற்றிவளைத்து சோதனை நடத்தினர்.

இதன்போது, ஒரு பெண்ணிடம் 245 கிராம் கஞ்சாவும் மற்றொரு பெண்ணிடம்  47 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.

கைதான இருவரும் 36 மற்றும் 24  வயதுடையவர்கள் எனவும்; இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார்; தெரிவித்தனர்;.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .