2025 மே 22, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 10 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை நகரப்பகுதியில் கஞ்சாவுடன் நடமாடிய இருவரை, நேற்று புதன்கிழமை (09) இரவு கைதுசெய்துள்ளதாக அம்பாறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நகரப்பகுதியில் பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது தலா 2 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .