2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 13 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய ஒருவரை அம்பாறை, அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில்  இன்று திங்கட்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது. இந்நிலையில், இரண்டு கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில், விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர், கட்டட நிர்மாண வேலைக்காக அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு வந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X