2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கஞ்சாவுடன் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

--எஸ்.கார்த்திகேசு, கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் திடீர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, வீடொன்றில் கஞ்சாவை பொதி செய்துகொண்டிருந்த குற்றச்சாட்டில் 42, 33 வயதுகளையுடைய இருவர் கைதுசெய்யப்பட்டனர். இதன்போது, ஒருவரிடமிருந்து சுமார் 200 கிராம் கஞ்சாவும் மற்றையவரிடமிருந்து சுமார் 300 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.
இச்சந்தேக நபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறிருக்க மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணிக் கிரான் பிரதேசத்தில்  கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய குற்றச்சாட்டில் 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 10,860 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.  

இதேவேளை  மட்டக்களப்பு, கோரகலிமடுப் பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 வயதுடைய பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 5190 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார்

இச்சந்தேக நபர்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த இடங்களுக்குச்; சென்று சோதனை மேற்கொண்டு சந்தேக நபர்களைக்; கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X