2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கட்டணம் செலுத்தாதோரின் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மே 17 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  மாதாந்த மின் கட்டணத்தை செலுத்தாத மின் பாவனையாளர்களின் மின் இணைப்புகளை துண்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிராந்திய மின் பொறியியலாளர் எம்.பர்ஹான், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்தியத்தில் சுமார் இரண்டாயிரத்து 500 பேர் மின் கட்டண நிலுவை செலுத்த வேண்டியுள்ளனர்.
கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் கட்டணம் செலுத்தாத மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.   

ஒரு மாதத்துக்கும் மேலாக கட்டணத்தை செலுத்தாதோரின்; மின் இணைப்பு துண்டிக்கப்படவுள்ளது. அவ்வாறு இணைப்பு துண்டிக்கப்படுமிடத்தில் மீள் இணைப்பை பெறுவதற்காக முற்றுமுழுதான மின் நிலுவைக் கட்டணம், தண்டப்பணம் மற்றும் மீள் இணைப்புக் கட்டணம் என்பன அறவிடப்படும்.

எனவே, மாதாந்த மின்சாரப் பட்டியலில் காணப்படும் நிலுவையை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு மின் பாவனையாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X