Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 நவம்பர் 26 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
இலங்கை மின்சாரசபையின் கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த 02 இரண்டு மாதங்களுக்கும் மேலாக கட்டணம் செலுத்தாத சுமார் 3,000 மின் பாவனையளர்கள் உள்ளதாக அப்பிராந்திய மின் பொறியியலாளர் எம்.பர்ஹான் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தாத இந்த மின் பாவனையாளர்களின் மின்னிணைப்பைத் துண்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மின்னிணைப்பு துண்டிக்கப்படும் பட்சத்தில் மீள் இணைப்பை பெற்றுக்கொள்ளும்போது, முற்றுமுழுதான மின் நிலுவைக் கட்டணம் மற்றும் மீள் இணைப்புக் கட்டணமும் செலுத்த வேண்டுமென்பதுடன், தண்டமும் அறவிடப்படுமெனவும் அவர் கூறினார்.
எனவே, மாதாந்த மின்சாரப் பட்டியலில் காணப்படும் நிலுவையை உடனடியாகச் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு மின் பாவனையாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago