2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கண்காட்சியும் சிறுவர் தினக் கொண்டாட்டமும்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாணத்தில் பாரிய வர்த்தகக் கண்காட்சியையும்; உலக சிறுவர் தினக் கொண்டாட்டத்தையும் எதிர்வரும்  ஒக்டோபர் மாதம் முதலாம்,  இரண்டாம்,  மூன்றாம் திகதிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறு கைத்தொழில் அமைச்சு, அம்பாறை மாவட்ட செயலாளர் காரியாலயம், அம்பாறை மாவட்ட வர்த்தக கைத்தொழில், விவசாய சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் அம்பாறை எச்;.எம்.வீரசிங்க விளையாட்டரங்கில் பி.ப 2 மணியிலிருந்து இரவு 11 மணிவரை கண்காட்சியும் சிறுவர் தினக் கொண்டாட்டமும் நடைபெறவுள்ளது.

விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான  அனைத்து நிறுவனங்களும் இலங்கை மத்திய வங்கி, அரச மற்றும் தனியார் வங்கிகள், கைத்தொழில் அபிவிருத்திச்சபை, அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்ப நறுவனம், காணி ஆணையாளர் திணைக்களம், ஏற்றுமதி அபிவிருத்திச்சபை, முதலீட்டுச்சபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை பொறியியலாளர் ஆராய்ச்சி நிறுவனம், லக்சல, ஆட்பதிவுத் திணைக்களம், இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், உணவு செயற்பாட்டாளர் சங்கம், தொழில் பயிற்சி அதிகாரசபை, பல்கலைக்கழகம், தேசிய செப்பமிடல் மத்திய நிலையம், தொழிலாளர் காரியாலயம், கால்நடை திணைக்களம், சுகாதாரத் திணைக்களம், அரச வர்த்தக நியாயசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, ஹிங்குரானை சீனி கைத்தொழில் நிலையம், நுகர்வோர் சம்பந்தமான அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியனவும் ஆடைகள், கட்டட சேவைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், மின் உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், விசேட ஆலோசனை சேவைகள் ஆகிய துறைகளில் இலங்கையிலுள்ள முதன்மையான கம்பனிகள் இந்த வர்த்தக கண்காட்சிக்கு வருகை தரவுள்ளன.

உலக சிறுவர் தினக் கொண்டாட்டத்துக்காக சிறார்களுக்காக நவீன விளையாட்டு  விநோத நிகழ்வுகளுடன் போட்டி நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கடையிலான விவாதப் போட்டி, சித்திரப் போட்டி, எல்லை, கரப்பந்து, வலைப்பந்து, கிரிக்கெட் ஆகியனவும் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்குவதற்கும்  ஏற்பாட்டுக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேற்படி 03 தினங்களிலும் பிரபல்யம் வாய்ந்த பாடகர், பாடகிகளின் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X