2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Princiya Dixci   / 2016 மார்ச் 19 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை (18) இரவு கத்திக்குத்துக்கு இலக்காகிப் பலியானார்.

பலியானவர், மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் அனிஸ் எனும் 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நிலையில் நேற்று (18) இரவு 9.40க்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாக அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.ரி.ஜாரியா தெரிவித்தார்.

பலியானவரின் மாமாவுக்கும் வேறு இருவருக்குமிடையே அக்கரைப்பற்று 2ஆம் கட்டை ஹோட்டல் ஒன்றின் முன்பாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனை அறிந்து அவ்விடத்துக்குச் சென்ற இளம் குடும்பஸ்தர், அவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்புச் சண்டையாக மாறியபோதே கத்திக்குத்துக்கு இலக்காகிப் பலியாகியுள்ளதாக ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவருவதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அக்கரைப்பற்றுப் பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X