2025 மே 19, திங்கட்கிழமை

கதிர்காமம் செல்வோருக்கு குடிநீர் விநியோகம்

Princiya Dixci   / 2016 ஜூலை 06 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-நடராஜன் ஹரன்

கதிர்காமம் செல்லும் பாதையாத்திரிகளுக்கு ஊகந்தை முதல் கூமுன வரையான வனப்பகுதியில் தினமும் நீர் வழங்குவதற்கான ஏற்பாடு, ஆலையடி வேம்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இக்குடிநீர் வழங்கும் ஏற்பாடானது, கடந்த 5 ஆம் திகதி வனவழிப்பாதை திறக்கப்பட்டது முதல் நடைபெற்று வருவதாக, ஆலையடி வேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. கமலநாதன் தெரிவித்தார்.

பொத்துவில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்விநியோகப் பிரிவிலிருந்து பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதுடன், சுமார் நாளொன்றுக்கு 18 ஆயிரம் லீற்றர் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X