2025 மே 21, புதன்கிழமை

கருங்கல் உடைக்கும் தொழிலாளி பலி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை மலையடிக் கிராமப் பிரதேசத்தில் கருங்கல் சறுக்கி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர், நேற்று திங்கட்கிழமை (18) மாலை உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருங்கல் உடைக்கும் தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த இவர், உடைத்த கருங்கற்களை, உழவு இயந்திரத்தில் ஏற்றும் போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், சம்மாந்துறை மாலையடிக் கிராமத்தைச் சேர்ந்த ஜலால்டீன் (வயது-45) என்பவராவார்.

சடலம், சம்மந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X