2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கருணாகரம் நிந்திக்கப்பட்டமைக்கு த.தே.கூ கண்டனம்

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு, வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கு இடையூறு விளைவித்து குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
 
மட்டக்களப்பு, வாழைச்சேனையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற அந்நிகழ்வில் கருணாகரம் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கையில் நபரொருவர், திடீரென மேடையில் ஏறி இடையூறு செய்து வன்முறையைத் தூண்டும் வண்ணம் செயற்பட்;டார்.
 
இவ்வாறான செயற்பாடுகள் எமது ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படுத்தி அவர்களை தவறான பாதைக்குத் திசை திருப்பலாம்.
 
எனவே, இதுபோன்ற விபரீதமான செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் வழிகோல வேண்டாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
 
இந்த கூட்டு அறிக்கையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. ஸ்ரீநேசன், சீ. யோகேஸ்வரன் மற்றும் ச. வியாழேந்திரன் ஆகியோருடன் கிழக்கு மாகாண சபை அமைச்சர் கி. துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான என். இந்திரகுமார், ஞா. கிருஷ்ணபிள்ளை, மா. நடராசா, கோ. கருணாகரம்(ஜனா) மற்றும் இரா. துரைரெத்தினம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
 
தமிழர் உரிமைப் போராட்டத்தைப் பற்றிப் பேச கருணாகரம் (ஜனா) அருகதையற்றவர் என்பது இடையூறு செய்து கூச்சல் போட்ட நபரின் வாதமாக இருந்தது என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • s.puvaneswaran Friday, 06 May 2016 03:03 PM

    we dont no the full matter, but i think Its a heart breaking to TNA party.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X