2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கருத்தரங்கு

Niroshini   / 2015 நவம்பர் 22 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இன்று  நடைபெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் அல்லது நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் பொறுப்புக்கள் மற்றும் வக்பு சட்ட விதிகள் சம்பந்தமாக தெளிவூட்டல்களும் பள்ளிவாயல் தலைவர் செயலாளர் மற்றும் பொளாளர்களின் பொறுப்புக்கள் கடமைகள் கட்டுப்பாடுகள் சட்டவிதிகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.அஹமட் நஸீல், கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸலாமிய நாகரீக பீடத் தலைவர் எம்.ரீ.எம்.றிஸ்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X