2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கருத்தரங்கும் இலவச மருத்துவ பரிசோதனையும்

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா,யூ.எல். மப்றூக்

அட்டாளைச்சேனை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான தொற்றா நோய் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இலவச மருத்துவ பரிசோதனையும் சனிக்கிழமை(12) சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் காலை 08.00 மணி முதல் 10.30 வரை நடைபெறவுள்ளாக சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இதன்போது,தொற்றா நோய் மருத்துவ பரிசோதனை, தொற்றா நோய் சுய விபர மருத்துவ அறிக்கை பதிதல் மற்றும் சுகவாழ்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளன.

இதேவேளை,உடற் திணிவுச் சுட்டி, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளன.

35 வயதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இரவு 10 மணி முதல் உணவு, பானங்கள் உட்கொள்வதை தவிர்த்து சமூகமளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .