2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கரச்சைக்குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 05 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், மருதமுனை கரச்சைக்குளத்தில் 16,000 மீன்குஞ்சுகள் இன்று வியாழக்கிழமை விடப்பட்டன. மருதமுனை நன்னீர் மீன்பிடி விரிவாக்கல்; சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கோல்டன், செப்பலி, கணையான் ஆகிய இன மீன்குஞ்சுகளே இந்தக் குளத்தில் விடப்பட்டன.

இந்த மீன்குஞ்சுகளை அம்பாறை மாவட்ட நீரியல்வள அபிவிருத்தித் திணைக்களம் வழங்குகின்றது. ஒரு மீன்குஞ்சின் விலை 02 ரூபாயாகும். இவ்வாறு குளங்களில் விடப்படுகின்ற மீன்குஞ்சுகள் 06 மாதங்களில் பிடிப்பதாகவும் ஒவ்வொரு மீனும் சுமார் 500 கிராம்  நிறையுடையதாகக் காணப்படும். இந்நிலையில்,  ஒரு கிலோ மீன் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஜனவரி, ஜு{ன், நவம்பர் ஆகிய மாதங்களிலேயே  குளங்களில் மீன்குஞ்சுகள் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
பெரிய குளங்களில் ஒரு இலட்சம் முதல்; 02 இலட்சம் வரையும் நடுத்தரக் குளங்களில்; 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையும் சிறிய குளங்களில் 15 ஆயிரம்  முதல்  30 ஆயிரம் வரையும் மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன.

நன்னீர் மீன் வளர்ப்புத்திட்டம் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய திட்டமாகும். இதன் மூலம் சிறந்த பயனைப் பெறமுடியுமென கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தெரிவித்தார்.

இங்கு அம்பாறை மாவட்ட நீரியல்வள அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.எல்.எம்.இம்தியாஸ், கல்முனை பிரதேச செயலக திவிநெகும திட்ட முகாமையாளர்; ஏ.சிஅன்வர், கல்முனை பிரதேச செயலாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகஸ்தர் கே.எல்.யாஸீன் பாவா, சிரேஷ்;ட முகாமைத்துவ   உதவியாளர் எஸ்.எம்.றபாயுதீன், பொறியிலாளர் எம்.எம்.எம்.சபீக்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .