2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் மண்டானை கிராமத்தைச் சேர்ந்த 53 வறிய மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சொய்லியம்ற் தமிழ் மன்றத்தின் நிதியுதவியின் ஊடாக 'கற்றலுக்கு கைகொடுப்போம்' எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று 12ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது திருக்கோவில் உதவிக் கல்வி பணிப்பாளர் க.பிரபாகரன் மற்றும் திருக்கோவில் கல்வி வலய யுனிசெப் திட்ட இணைப்பாளர் எஸ்.விவேகாணந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X