2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கல்முனை கல்வி வலயம் சாதனை

Niroshini   / 2015 நவம்பர் 11 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

2014ஆம்  ஆண்டு  நடைபெற்ற  கிழக்கு மாகாண மட்ட  தமிழ் மொழி மூல விஞ்ஞான  வினாடி வினாப் போட்டியில்  கல்முனை கல்வி வலயத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.  இதற்கிணங்க,சம்பியன் கிண்ணத்தை  வலயக் கல்வி அலுவலகத்துக்கு வழங்கும்  நிகழ்வு இன்று புதன்கிழமை கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் சம்பியன் கிண்ணத்தைப் பெற்று வந்த விஞ்ஞான பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சௌதுல் அமீன் வலயத்துக்கான  கிண்ணத்தை வலயக்கல்விப் பணிப்பாளரிடம் ஒப்படைத்தார் .

கேடயத்தைப் பெற்றுக் கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அங்கு உரையாற்றுகையில்,

மாகாண  மட்டத்தில் முதலிடம்  பெறுவதற்கு  காரணமானவர்களாக இருந்த  கல்முனை கார்மேல் பற்றிமா  கல்முனை அல் அஸ்கர், காரைதீவு  விபுலானந்தா,காரைதீவு ஆர்.கே.எம் பெண்கள்  பாடசாலைகளின் மாணவர்களும் வழிகாட்டிய ஆசிரியர்களும்  குறிப்பாக விஞ்ஞான பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சௌதுல் அமீனும்  பாராட்டப்பட வேண்டியவர்களாவார் என தெரிவித்தார்.

வைபவத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.அப்துல் ரஹீம் பீ .எம்.வை.அரபாத்  உட்பட கோட்டக்  கல்விப் பணிப்பாளர்களும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களும்  ஆசிரிய ஆலோசகர்களும்  கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X