2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கல்முனை மாநகரசபை அமர்வு நாளை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 22 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நாளை சனிக்கிழமை காலை 9.30 மணி முதல்  மாநகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த அமர்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர், செனட்டர் மர்ஹூம் எஸ்.இஸட்.எம்.மசூர் மௌலானா மற்றும் முன்னாள் கல்முனை பிரதேச சபைத் தவிசாளர் மர்ஹூம் ஐ.ஏ.ஹமீட்டின்; மறைவையிட்டு அனுதாபப் பிரேரணைகளை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி முன்வைக்கவுள்ளார்.  

மேலும், சேனைக்குடியிருப்புப் பகுதியிலுள்ள சில வீதிகளின் பெயர் மாற்றம் தொடர்பான பிரேரணைகளை மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கையின் அரசியல் யாப்புத் திருத்தம் தொடர்பில் மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் விசேட உரையும் நடைபெறவுள்ளது என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X