Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா,எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை அச்சுறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, வர்த்தகர் உட்பட இருவரை தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணைகளிலும் 1,500 ரூபாய் ரொக்கப்பிணைகளிலும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பி.பயாஸ் ரஸாக், இன்று செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இவர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
சாய்ந்தமருது நகருக்கு கடந்த சனிக்கிழமை (03) மாலை சென்ற ஆணையாளர், மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடைக்கு முன்பான வீதியோர நடைபாதையில் மோட்டார் சைக்கிளொன்று விற்பனைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை அவதானித்து, அம்மோட்டார் சைக்கிளை சற்று நகர்த்தி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து, அக்கடை உரிமையாளரும் அக்கடையில் நின்ற மற்றைய நபரும் ஆணையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்;.
இந்நிலையில், ஆணையாளரை அக்கடை உரிமையாளர் அச்சுறுத்தித் தாக்கவும் முற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆணையாளர் முறைப்பாடு செய்தார். இருப்பினும், இவர்களைக் கைதுசெய்யாமையைக் கண்டித்து பணிப்பகிஷ்கரிப்புடன் ஆர்;ப்பாட்டப் பேரணியில் திங்கட்கிழமை (05) மாநகரசபை ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்றையதினம் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்த ஊழியர்கள், அதனைக் கைவிட்டனர்;.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .