2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கல்முனையில் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்

Niroshini   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யூ.எல். மப்றூக்

வரவு-செலவுத் திட்டத்தில் வைத்திய அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு மற்றும் வாகன வரிச் சலுகை வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் நடைபெறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று வியாழக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகள்,சிகிச்சை நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள், நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலங்களில் கடமையாற்றும் 115 வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுத்தீன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், மூன்று ஆதார வைத்தியசாலைகளும், 11 பிரதேச வைத்தியசாலைகளும், 12 ஆரம்பப் பராமரிப்பு நிலையங்களும் 13 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களும் காணப்படுகின்றன.

இதேவேளை, இப்;பிராந்தியத்தில் பாலியல் தொற்று நோய் தடுப்பு நிலையம் ஒன்றும் மார்பு சிகிச்சைப் பிரிவு ஒன்றும் அமைந்துள்ளன.

இப்பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை காரணமாக, மேற்படி அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சிசிக்சை நிலையங்களிலும் வெளிநோயாளர்களுக்கான சிகிச்சைகள் மறுக்கப்பட்டிருந்தன.

எனினும், வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளார்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

                                                                                                                                                                                                                                             
                                       
                                                             

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .