2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கலந்துரையாடல்

Niroshini   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்  

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமுக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் கீழுள்ள காரியாலயங்களில் கடமையாற்றுகின்ற உயரதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று (24) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

இதில், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமுக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலபதி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு கலந்துகொண்ட உயரதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்,

தங்களால் மேற்கொள்ளப்படுகின்ற அரச ஊழியர்களின் இடமாற்றங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கக்கூடாது. தங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இடமாற்றங்கள் யாவும் மிகச் சரியான முறையில் அரச ஊழியர்களின் நலன்களை கருத்திற்கொண்டுதான் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் அரசியல்வாதிகளினால் கொண்டு வரப்படுகின்ற இடமாற்றங்களைச் செய்யும்போது பாரிய சவால்களை நாங்கள் எதிர்நோக்கவேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் கூறுகையில்,

அரச ஊழியர்களின் இடமாற்றங்களை நீங்கள் சரியாகத்தான் செய்து வருகின்றீர்கள். இருந்தும் அரசியல்வாதிகளினால் கொண்டு வரப்படுகின்ற இடமாற்றங்களும், குறித்த அமைச்சின் அமைச்சர்களுடன்  சரியான முறையில் கலந்துரையாடப்பட்ட பின்னர்தான் இடம்பெறுகின்றன.

அரசியல்வாதிகளும் பிழையான முறையில் இடமாற்றங்களைச் செய்ய முனையமாட்டார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X