Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Sudharshini / 2016 மார்ச் 05 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸிரின் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைவர்கள், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், இலங்கை மின்சார சபையின் உயரதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபையின் செயலாளர்கள், பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரிகள் உட்பட பலர்; கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில், பாலமுனை பிரதேசத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மின்சார வேலைகள், மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வேலைகளும் இம்மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் பணிப்புரை விடுத்தார்.
இச்சந்திப்பில் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .