Editorial / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, றாசிக் நபாயிஸ்
கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள வர்த்தகரும் சமூக சேவையாளருமான எம்.ஜ.எம்.றஜப்தீன், தனது சத்தியப் பிரமாண பத்திரத்தை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம் இன்று (27) கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாநகர மேயர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ரி.ராஜரட்ணம், சபைச் செயலாளர் ஏ.எம்.ஆரிப், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜீ.எம்.நதீர், அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மஸீன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினராக பதவி வகித்து வந்த சட்டத்தரணி என்.எம்.அஸாம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மருதமுனையை சேர்ந்த எம்.ஐ.எம்.றஜப்தீன் அக்கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
8 minute ago
19 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
48 minute ago