Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
பி.எம்.எம்.ஏ.காதர் / 2018 மே 09 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகரப் பிரதேசத்தில், திண்மக் கழிவகற்றல் பிரச்சினை, பெரும் சவலாலாக இருந்து வருகிறது எனத் தெரிவித்த கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள, மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம்.றக்கீப்பைப் பாராட்டிக் கௌரவித்த நிகழ்வு, மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில், நேற்று (08) மாலை நடைபெற்றது. இங்கு வைத்தே, இக்கருத்தை றக்கீப் வெளிப்படுத்தியிருந்தார்.
பெரிய நீலாவணை நெசவாளர் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த கௌரவிப்பு நிகழ்வு, கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில், மன்றத்தின் தலைவர் ஏ.எல்.சபுறுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
அங்கு மேயர் றக்கீப் மேலும் உரையாற்றுகையில், “கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உடனடியாகத் தீர்த்து வைக்க முடியாது. எனினும், பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை வகைப்படுத்தி, நீண்டகால திட்டமிடலின் அடிப்படையிலேயே, முன்னெடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்ட்டு வருகின்றன. அவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டார்.
கல்முனை மாநர சபைக்கான தேர்தலில், இரண்டாம் வட்டாரத்திலேயே அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த நிலையில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது கௌரவத்தை அவர்கள் பாதுகாத்திருக்கின்றனர் எனவும், நன்றியுணர்வுடன் எப்போதும் இருப்பாரெனவும் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில், மேயர் ஏ.எம்.றக்கீப், அவரது மனைவி திருமதி நஸ்ரின் சகிதம் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி, தலைப்பாகை அணிவித்து, வாழ்த்துப் பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
5 hours ago
5 hours ago