2025 ஜூலை 07, திங்கட்கிழமை

களவிஜயம்

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ்,வி.சுகிர்தகுமார் 

ஆலையடிவேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்,  நேற்று வியாழக்கிழமை (12)  களவிஜயத்தை மேற்கொண்டார்.

விளையாட்டு கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினால்  பெரிதும் பயன்படுத்தப்படும் தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது.

இந்தக்குறைபாடுகளை கண்டறிந்து கொண்ட பிரதி அமைச்சரும் அமைச்சின் அதிகாரிகளும் இம்மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக இங்கு தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக தமிழ், முஸ்லிம் பிரதேசங்களின் உள்ள விளையாட்டு மைதானங்களை சர்வதேச தரத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .