Editorial / 2022 ஜனவரி 06 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவரை, அம்பாறை நகர் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (06) கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, அம்பாறை - கண்டி வீதியின் புத்தங்கல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, அம்பாறை நோக்கிப் பயணித்த காரை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த காரில் 3 கஜமுத்துகளை கடத்திவந்த இருவரையும் கைது செய்ததுடன், கஜமுத்து மற்றும் காரையும் அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
19 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
48 minute ago