2025 மே 19, திங்கட்கிழமை

சிகை அலங்கார உரிமையாளருக்கான பயிற்சிப்பட்டறை

Princiya Dixci   / 2016 ஜூன் 18 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

உடம்புக்கு கேடு விளைவிக்கக் கூடிய அழகு சாதனப்பொருட்களை பாவிப்பதனால் புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படுமென அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார உரிமையாளருக்கான பயிற்சிப்பட்டறை, நேற்று வெள்ளிக்கிழமை (17) மாலை அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந் கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிகை அலங்காரத்தின் போது இரசாயன பதார்த்தங்களைத் தவிர்த்து தனிநபர் சுகாதாரத்தைப் பேண வேண்டும்.

பொதுவாக சிகை அலாங்கார நிலையங்களில் தொற்றுநோய் பரவக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

சிகை அலங்காரம் செய்யும் தொழிலாழி வாய்க்கவசம், கையுறை போன்றவற்றை அணிதல் வேண்டும்.

தொழிலாளர்களின் சுகநல மருத்துவ அறிக்கைகள் பேணப்படுவதுடன், தைய்போயிட் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து ஏற்றி இருத்தல் வேண்டும்.

மருந்துக் கடைகள், உணவகங்கள், பேக்கரிப் பண்டங்கள் மற்றும் பழங்கள் போன்றவை விற்பனை செய்யும் இடங்களுக்கு அருகாமையில் சிகையலங்கார நிலையங்களை அமைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X