Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
சின்னப் பாலமுனை சஹ்வா குர்ஆன் மத்ரிஸாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயத்தை மேற்கொண்டு அங்கு நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துக்கொண்டார்.
கட்டார் நாட்டு மீஸான் அமைப்பினர் விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவே சுகாதார அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது, மத்ரிஸாவின் பிரதி அதிபர் மௌலவி என்.பி.எம்.நஜாத் ஷஹ்வி குர்ஆன் மத்திரிஸாவின் நிலைமையைப்பற்றி அமைச்சரிடம் எடுத்துரைக்கையில்,
தற்போது 80 மாணவர்கள் குர்ஆனை கற்றுவருவதாகவும் இதில் 10 மாணவர்கள் குர்ஆனை பூரணமாக ஓதி நிறைவுசெய்த நிலையில் வெளியேறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் 30 பேர் உள்வாங்கப்படவுள்ளதாகவும் இவர்களுக்கு சமையல் செய்யும் அறை பூர்த்தியற்ற ஒரு நிலைமையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இக்கோரிக்கையை கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்காக சமையல் செய்யும் அறையை பூர்த்தி செய்வதற்கு 10 இலட்சம் ரூபாய் நிதியினை எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கான நிதியிலிருந்து நான் வழங்குவேன் என்று உறுதியளித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago