2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சின்னமுகத்துவார கடற்கரைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, ஆலையடிவேம்பு சின்னமுகத்துவார கடற்கரைப் பிரதேசத்தை ஓய்வெடுக்கும் இடமாக மாற்றியமைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உரியவர்கள் முன்னெடுக்க வேண்டுமென சமூக அமைப்புக்களுடன் பொதுமக்களும்; வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் ஓய்வு எடுக்கும் இடமாக சின்னமுகத்துவார கடற்கரைப் பிரதேசம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இக்கடற்கரைப் பிரதேசம் இதுவரையில்; அபிவிருத்தியினுள் உள்வாங்கப்படவில்லை. சுற்றுலாத் துறைக்காக அரசாங்கம் அதிக நிதியை செலவு செய்கின்ற நிலையில், இக்கடற்கரையோர பிரதேச அபிவிருத்தியையும் சற்று கவனத்திற்கொள்ள வேண்டும். இக்கடற்கரைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச சபை கவனத்திற்கொள்ள வேண்டுமெனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

சின்னமுகத்துவார கடற்கரைப் பிரதே அபிவிருத்தி தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேசபை செயலாளர்  திருமதி வி.கமலநாதனிடம் கேட்டபோது, 'புதிய உள்ளூராட்சிச் சபை தெரிவுசெய்யப்பட்ட பின்னர்  இந்த கடற்கரைப் பிரதேசம் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X