2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சீமெந்து பக்கெட்டுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் சம்பத் செவன வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 40 குடும்பங்களுக்கு வீடமைப்புக்காக தலா 10 சீமெந்து பக்கெட்டுகள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன், இரண்டு குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்களுக்கான காசோலைகளும் இதன்போது வழங்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை இவை வழங்கப்பட்டன.   

தலா ஒரு இலட்சம் ரூபாய் படி ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுகாலவரையில் தன்னால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வீடமைப்புக் கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள் மேலதிக பங்களிப்புடன் தமது வீடுகளின் திருத்தவேலைகளை விரைவாகப் பூர்த்திசெய்து முடித்துள்ளதுடன், அந்த வீடுகள் சம்பிரதாயபூர்வமாக விரைவில் அவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X