2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருதில் குண்டு தாக்குதல்

Niroshini   / 2016 மே 14 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா,எம்.எஸ்.எம். ஹனீபா, கனகராசா சரவணன், ரீ.கே.றஹ்மத்துல்லா

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில், அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான ஏ.எம்.ஜெமீலின் ஆதரவாளரின் வீட்டில் இன்று சனிக்கிழமை  அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது-15ஆம் பிரிவு லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் பின்னாலுள்ள குவாட்டஸ் ஒழுங்கையில் அமைந்துள்ள 870-ஆம் இலக்க வீட்டின் மீதே  இத்தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வீட்டின் முன் அறை சிறிதளவில் சேதமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த  கல்முனைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டப்பி என்று அழைக்கப்படும் உள்ளூர் தயாரிப்பு குண்டை க்கொண்டே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X