2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருதில் கடத்தப்பட்ட தாய், யாழில் மீட்பு

George   / 2016 மே 13 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன் 

'கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் கடத்தப்பட்ட 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய், ஒரு வாரத்தின் பின்னர் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்' என கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த தாய் கடத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரைக் கடந்த 08ஆம் திகதி பொலிஸார் கைதுசெய்தனர்.

தொடர்ந்து,  கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் இருவரையும் 10ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியபோது இருவரும் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டனர்.
 
அதனையடுத்து, சந்தேகநகர்கள் இருவரையும் இம்மாதம் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸாக் உத்தரவிட்டார். 

கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்ற குறித்த பெண், பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் நிலையிலேயே இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் பெண்ணின் முன்னாள் கணவரும் தேடப்பட்டு வந்த நிலையில், பொலிஸாருக்கு கிடைக்க ரகசியத் தகவலையடுத்து, கல்முனை பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு விரைந்துள்ளனர்.

கடத்தப்பட்ட பெண், அவரது முன்னாள் கணவருடன் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றிலில் இருந்த நிலையில் மீட்கப்பட்டதுடன் முன்னாள் கணவன் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த பெண், வைத்திய பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X