Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா,பி.எம்.எம்.ஏ.காதர்
அம்பாறை, சாய்ந்தமருதுப் பிரதேச செயலகப் பிரிவில் நாளை மறுதினம் சனிக்கிழமை கல்முனை மாநகர சபையால் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
சாய்ந்தமருதுப் பிரதேச செயலகப் பிரிவில் அன்றையதினம் 70 ஊழியர்கள்; பணியில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் 02 பெக்கோ இயந்திரங்கள், 09 உழவு இயந்திரங்கள், 01 லொறி உள்ளிட்டவையும் இவ்வேலைத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டு, சுமார் 50 ஆயிரம் கிலோகிராம் திண்மக்கழிவுகளை சேகரித்து அகற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்துக்கு சாய்ந்தமருதுப் பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றின்; ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது.
ஆகவே, பொதுமக்கள் குப்பைகளைப் பொதி செய்து, தங்களின் வீடுகளுக்கு முன்பாக வைக்குமாறு ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025