2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சீருடைக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா  

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத்துணிகளுக்கு பதிலாக பணப் பற்றுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் தெரிவித்தார்.

இவ்வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட  அட்;டாளைச்சேனை, பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று கோட்டத்திலுள்ள 69 பாடசாலைகளுக்கு சீருடைத்துணிகளுக்கான பணப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளது.

விரைவாக இப்பற்றுச்சீட்டுகளை உரிய மாணவர்களுக்கு வழங்கி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்துக்கமைய அதற்கான அறிக்கையை காலம் தாழ்த்தாது, வலயக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென சகல அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

200 ரூபாய் தொடக்கம் 1,300 ரூபாய்வரை மாணவர்களின் வகைப்படுத்தலுக்கேற்ப சீருடைக்கான பண பற்றுச்சீட்டுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிக்கப்பட்டுள்ள அண்மித்த புடவை விற்பனை நிலையங்களில் சீருடைகளை பெற்றுக்கொள்ளளாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .