2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சாரதி, நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-எஸ்.ஜமால்டீன்        

அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதான வீதியில் நேற்று  திங்கட்கிழமை (06) இரவு  கல்முனை இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த தனியார் பஸ்ஸை இடைமறித்து பஸ் சாரதி, நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இருவரை இன்று (07) கைது செய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பஸ் சாரதியான ஏ.அஸ்ஹர் (37 வயது),  நாவிதன்வெளி அன்னமலையைச் சேர்ந்த நடத்துனரான சந்திரசேகர் தனஞ்சயன்(24வயது) என்பவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

அட்டாளைச்சேனை, பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த இருவர் கல்முனையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நேற்று  இரவு (06) பாலமுனையை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த தனியார் பஸ் காரைதீவு பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்ட போது முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தமது நண்பர்களை வரவழைத்து பஸ்ஸையும் பஸ் சாரதியையும் நடத்துனரையும் தாக்கியுள்ளனர். இதில் பஸ்ஸின் கண்ணாடிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, இருவர் கைது செய்யப்பட்டதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட ஏனையோர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X