2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிரமதானத்தில் பங்கேற்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

'சுத்தமான பாடசாலையும் ஆரோக்கியமான மாணவர்களும்' எனும் தொனிப்பொருளில் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் நாளை மறுதினம் வியாழக்கிழமை  சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளது.  

கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சிரமதானத்தில் பங்கேற்குமாறு கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களிலுள்ள விளையாட்டுக் கழகங்கள், சமூகசேவை அமைப்புகள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்சிரமதானத்துக்கு கல்முனை பிராந்திய சுகாதார திணைக்களம், கல்முனை மாநகர சபை, காரைதீவு இராணுவ படை முகாம், கல்முனை பொலிஸார், சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச செயலகங்கள் ஆகியவை ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக  கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X