2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சிறுமியைக் காணவில்லை: சகோதரியின் கணவரே கடத்தியதாக புகார்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எஸ். ஜமால்டீன்

பதின்நான்கு வயதுச் சிறுமியை, சகோதரியின் கணவர் கடத்திச் சென்றுள்ளதாகச், சிறுமியின் பெற்றோரால், ஞாயிற்றுக்கிழமை (07), அக்கறைப்பற்று பொலிஸூக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அட்டாளைச்சேனை, 08ஆம் பிரிவில், பெற்றோரின் பராமரிப்பில் இருந்த குறித்த சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) காணமற் சென்றுள்ளார். அதேதினத்தன்று சகோதரியின் கணவனும் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த 22 வயது நபரே, சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாக அறியக்கிடைத்த பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை வழங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X