Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 29 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம்.எம்.ஏ.காதர்,எம்.எஸ்.எம். ஹனீபா,எம்.சி. அன்சார்,வடிவேல்சக்திவேல்,நடராஜன் ஹரன்,வி.சுகிர்தகுமார்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணத்தினால், கிழக்கு மாகாணத்தில் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 01ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி, இலங்கை தேசிய பாலியல் நோய், எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு, சனிக்கிழமை (28) இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடாவிலும், அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் உல்லையிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றது' என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.
எனவே, இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலான கருத்தரங்குகள், ஆலோசனைகள் மற்றும் சுலோகங்கள் மூலமாகவும் அறிவுறுத்தி வருகின்றோம். இவற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த பாலியல் தொடர்பான நோய்கள் மூலம் ஏற்டுகின்ற பாதிப்புக்களையும் இவற்றைத் தடுப்பதற்கான ஆலோசனைகளையும், ஊடகவியலாளர்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்து மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இங்கு இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் வைத்திய நிபுணர் வைத்தியர் திருமதி சத்தியா ஹேரத் கூறுகையில்,
'இன்றும் எங்களுடன் சிகிச்சை உண்டு' எனும் தொனிப்பொருளிலான தேசிய எயிட்ஸ் தின நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(01) மட்டக்களப்பு நகரில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு நகர சபை மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் காந்தி சதுக்கத்திலிருந்து விளிப்புணர்வு ஊர்வலம், எச்.ஐ.வி. பரிசோதனை, எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025