2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.

இதனடிப்படையில் தேசிய சிறுவர்; பாதுகாப்பு அதிகார சபையும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து, அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்திலுள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாடசாலை சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி மற்றும் வான் சாரதிகளுக்கு, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (19) காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உரையாற்றுகையில், 'கடந்த காலங்களில் முச்சக்கரவண்டி சாரதிகளே துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதற்கு காரணமானவர்களாக காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகள், வான்கள் போன்றவற்றில் போடப்படும் பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றன குழந்தைகளை தவறான வழிக்கு கொண்டுச் செல்லக்கூடியதாக காணப்படுகின்றன. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

எம்மை நம்பி பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். அவர்களது குழந்தைகளை காதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும். நவீன தொழில்நுட்பங்களின் காரணமாக தற்போது கையடக்க தொலைபேசிகளில் சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் கையடக்க தொலைபேசியின் மோகம் சிறுவர்களிடத்தில் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

அவற்றை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் உங்களிடத்திலுள்ளது. உங்களுடைய வாகனத்தில் வரும் ஒவ்வொரு குழந்தையின் செயற்பாட்டையும் நன்றாக அவதானித்து அவர்களின் பெற்றோர்களிடத்தில் தெரியப்படுத்துவதன் ஊடாக, ஆரம்பத்திலேயே இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியும்' என தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சிந்தனநாணயக்கார, காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த், தேசிய சிறுவர்; பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட சமூக உளநல உத்தியோகத்தர் யூ.எல்.அசாறுதீன், உளநல வைத்தியர் டாக்டர் எஸ்.சராப்தீன், போக்குவரத்து பொலிஸார்;, சிறுவர் மற்றும் மகளிர்; பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர்; பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X