2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சேவை நலன் பாராட்டு விழா

Niroshini   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபராக இருந்து வெள்ளிக்கிழமை (27) ஓய்வு பெற்ற எம்.ஐ.எம்.சஹாப்தீனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை கல்லூரி அதிபர் எம்.எம்.எம்.மீராசாகீப் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம்,விசேட அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்  ஏ.எல்.எம்.காஸீம்,கௌரவ அதிதிகளாக பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பயாஸ் றஸாக், ஓய்வு பெற்ற முன்னாள் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம்,பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான ஏ.எஸ்.அஹமட் கியாஸ், எம்.ஏ.றஹமத்துல்லா மௌலவி, உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.ஹனிபா இஸ்மாயில், ஓய்வு பெற்ற இக்கல்லூரியின் முன்னாள் அதிபர்களான அதிபர் திலகம்  எம்.ஏ.உதுமாலெப்பை, ஏ.அப்துல் அஸீஸ், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஒய்வு பெற்ற அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு,பொற்கிளி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும்,சேவை நலன் பாராட்டு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X