Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 19 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பொத்துவில் செவிப்புலனற்றோருக்கான பாடசாலை திறந்து வைக்கும் வைபவமும் செவிப்புலனற்றோர் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வும், நேற்று சனிக்கிழமை (18) பொத்துவிலில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு, செவிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் ஏ.சீ.பௌசி முகைதீன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஸித், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.ஏ. மலீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
'செவிப்புலனற்றோர் சங்கத்தில், 88 ஆண்களும், 83 பெண்களுமாக 171 பேர் உள்ளதாகவும், குறித்த சங்கத்தினரால் நடத்திச்செல்லப்படும் பாடசாலையின் 22 மாணவர்களும் கல்வி பயில்வதாக,' அச்சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சகல வசதிகளுடன் கொண்ட ஒரு விசேட பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாகவும், விளையாட்டுப் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயை பாடசாலையின் அபிவிருத்திக்கு ஒதுக்குவதாகவும் சிறப்பு விருந்திரனாக வருகை தந்திருந்த முன்னாள் தவிசாளர் எம்.ஏ.சீ.வாஸித் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இரண்டாயிரம் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago
3 hours ago