2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சைவசமயப் பரீட்சை பிற்போடப்பட்டது

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 05 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

ஆலையடிவேம்புப் பிரதேச இந்து மா மன்றத்தினால் அம்பாறை மாவட்டத்தில் இம்மாதம் 7ஆம் திகதி நடத்தப்படவிருந்த சைவசமயப் பரீட்சை தவிர்க்கமுடியாத சில காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைக்குழுத் தலைவரும் இந்து மா மன்ற இணைப்பாளருமான ம.காளிதாசன் தெரிவித்தார்.

இப்பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

குறித்த தினத்தில் மாகாண மட்டத்தில் நடைபெறவுள்ள விஞ்ஞான தொழில்நுட்பப் பரீட்சையில் மாணவர்கள் பலர் கலந்துகொள்வது உட்பட சில காரணங்களினால் இப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அகில இலங்கை இந்து மா மன்றத்தின் அனுசரணையுடன்  ஆலையடிவேம்பு பிரதேச இந்து மா மன்றம் 13ஆவது வருடமாக இப்பரீட்சையை நடத்ததுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X