2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Niroshini   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் துறைமுகத்துக்கு முன்னால் உள்ள வீதியில் வைத்து இன்று (05) தீர்வை செலுத்தாமல் நாட்டுக்கள் கொண்டு வரப்பட்ட டொப் மவுண்டன் என்ற பெயருடைய 100 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக  அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபரை சோதனை செய்தபோது அவரது உடமையில் இருந்து சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதனையடுத்து, குறித்த நபரை கைது செய்ததாகவும் தெரிவித்தனர்.

குறித்த நபர் கல்முனைக்குடி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கடற்றொழிலில் ஈடுபட்டுவருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X