2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சட்டவிரோத சிகரெட்டுகள் வைத்திருந்தவருக்கு சிறைத் தண்டனை

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சட்டவிரோதமாக 3,000 சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஜுட்சன் இன்று (07) 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்து சாய்ந்தமருது வீதியில் 3,000 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கல்முனைக் குடியைச் சேர்ந்த அப்துல் ஹமீட் தன்ஸில் (வயது 46) என்ற குடும்பஸ்தர் அம்பாறை மாவட்ட கல்முனைப் பிரிவு புலனாய்வுப் பொலிஸாரால் சனிக்கிழமை (05) இரவு 8.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .