2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 10 பேர் கைது

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 08 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு, திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் 10 பேரை திங்கட்கிழமை (07) மாலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சாரசபையின் கொழும்புத் தலைமையக அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, இவர்கள் தங்களின் வீடுகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமை தெரியவந்தது.

இவர்களில் 07 பேர் மின்வாசிப்பு மானியில் குளறுபடி செய்துள்ளமை தொடர்பிலும் 03 பேர் மின்கம்பிகளில் கொளுவி மின் இணைப்பை பெற்றமை தொடர்பிலும் கண்டறியப்பட்டுள்ளது.  

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 05 பெண்கள் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .