Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2016 ஜூன் 07 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்பூர் கடற்பரப்பில், சட்டவிரோதமான முறையில் டைனமைட் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவரை, தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான் திங்கட்கிழமை (06) விடுவித்துள்ளார்.
சம்பூர் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் டைனமைட் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூவரை சம்பூர் கடற்படையினர், திங்கட்கிழமை கைது, இவர்களிடமிருந்து மீன்பிடிக்க பயன்படுத்திய படகு மற்றும் 504 கிலோகிராம் மீன் என்பவற்றை சம்பூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், மூவரையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எதிர்வரும் 7ஆம் மாதம் 14ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .